jump to navigation

கடவுச்சொல்லின் வலிமையைக் கண்டறிதல் ஏப்ரல் 1, 2008

Posted by உதய தாரகை in Internet, Useful Website.
1 comment so far

7.jpgஇணையப்பரப்பில் Password என்று சொல்லப்படும் கடவுச்சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த கடவுச்சொல் மூலமே அனைத்து விதமான சகல இணையச் சேவை நிலைகளும் மிகத் தெளிவாக நடைமுறை செய்யப்படுகின்றன. இந்தக் கடவுச் சொல்களை எவரும் அனுமானிக்க முடியாத வகையில் அமைத்துக் கொள்ளல் கட்டாயமான தேவையாகும். அப்போதுதான், இணையப் பரப்பில் எமது தனிமனித சுதந்திரத்திற்கு உரித்தான பாதுகாப்புக் கிடைக்கும்.

உங்கள் கடவுச்சொல்களின் வலிமை எந்தளவில் காணப்படுகின்றது என்பதை சொல்லும் இணையச் சேவையைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன்.

The Password Meter என்ற இணையத்தளம் நீங்கள் உங்களது கடவுச்சொல்லை Type செய்யும் போது, அதன் உறுதியை (மற்றவர்களால் அனுமானிக்க முடியாதா? முடியுமா? ) சதவீத அளவில் தெளிவாகச் சொல்லும். இனியென்ன உங்கள் கடவுச் சொல்லும் கண்டுபிடிப்பதற்கு கஷ்டமானதாக இருக்கிறதா? எனக் கண்டறியுங்கள்..

- உதய தாரகை

இலவச ஞாபகப்படுத்தல் சேவை மார்ச் 31, 2008

Posted by உதய தாரகை in Internet, Useful Website.
2 comments

7.jpgநீங்கள் அன்றாட வாழ்வில் நாளாந்தம் எத்தனையோ விடயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறீர்கள் என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மிக வேகமான நேரமேயில்லாத நிலையில் முக்கியமான சில நிகழ்வுகள் கூட உங்களால் மறக்கப்பட்டு விடலாம்.

8.jpg

அவற்றை குறித்த நாளில் உரிய நேரத்திற்கு ஞாபகப்படுத்தித் தரும் சேவையாக YourLi.st என்ற இணையத்தளத்தைக் குறிப்பிடலாம். இதில் என்ன விசேடம் தெரியுமா? எமக்குத் தேவையான Reminder களைப் பெற்றுக் கொள்ள அவ்விணையத்தளத்தில் Register ஆக வேண்டிய கட்டாயமில்லை.

எமது மின்னஞ்சலையும், குறித்த ஞாபகப்படுத்தலின் நாளையும் குறித்துக் காட்டினால் போதும். உங்களை உரிய நேரத்திற்கு மறக்காமல் ஞாபகப்படுத்தும்.

சென்றுதான் பாருங்களேன்.