உங்கள் Pen drive இல் U3 தொல்லையா? மார்ச் 26, 2008
Posted by உதய தாரகை in Hardware, Pen drive, Software.add a comment
அநேகமாக Pen drive ஐ வாங்கும் போது, அதில் சேமிக்கும் தரவுகளை ஒழுங்கமைவாக கடவுச் சொல்லிட்டு பாதுகாக்க வழிசெய்யும் பொருட்டு குறித்த Pen drive உடனேயே U3 எனப்படும் மென்பொருளும் நிறுவப்பட்ட நிலையில் கிடைக்கிறது.
கணினியோடு Pen drive ஐ இணைக்கும் போது, குறித்த U3 மென்பொருள் இயங்கத் தொடங்கும். கடவுச் சொல் கொடுக்கப்பட்டிருந்தால் கடவுச் சொல்லை வழங்குமாறு பணிக்கும். அத்தோடு, Pen drive உள்ள தரவுகளையும் தெளிவான வகையில் பெற்றுக் கொள்ளவும் வழி செய்யும்.
ஆனாலும், இந்த மென்பொருள் Pen drive ஐ கணினியுடன் இணைக்கும் போதெல்லாம் இயங்கத் தொடங்குவது எரிச்சலைத் தரும் நிகழ்வுதான். ஆக, U3 மென்பொருள் உங்களுக்குத் தொல்லையா? அதனை Pen drive இலிருந்து இலகுவாக delete செய்வதன் மூலம் நீக்கிக் கொள்ள முடியாது.
ஆனாலும் கவலையை விடுங்கள். இதோ இருக்கிறது அதற்குப் பரிகாரம்.
U3 Software ஐ உங்கள் Pen drive இலிருந்து அகற்றும் பணியைச் செய்யும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை உங்கள் Pen drive இல் இயங்கச் செய்யுங்கள். அவ்வளவுதான் இனி U3 தொல்லையே இல்லை.
U3 uninstaller – [இங்கே கிளிக் செய்யுங்கள்]
முக்கிய குறிப்பு: நீங்கள் U3 Software ஐ உங்கள் Pen drive இலிருந்து அகற்ற முன், உங்கள் Pen drive இலுள்ள உங்களது Data களை வேறொரு இடத்தி்ல் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் (Hard diskஇல்). இல்லாவிட்டால் உங்கள் Pen drive இல் காணப்படும் அனைத்து Data வும் அழிந்துவிடும்.
- உதய தாரகை