தொட்டால் பூ மலரும் ஜூலை 11, 2008
Posted by உதய தாரகை in Hardware, Internet, Special Feature.add a comment
தொழில்நுட்ப வளர்ச்சியின் வியாபிப்பு மிக வேகமாகவே இடம்பெற்று வருகின்றதை எம்மால் நிறையவே அவதானிக்க முடிகிறது. வளர்ச்சி காணும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சாத்தியங்கள் ஒன்றா, இரண்டா… இல்லேயே ஆயிரமாயிரம். இந்த தொழில்நுட்hத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியுள்ள இன்னொரு புதுமையான தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையே இக்கட்டுரை ஆராயப்போகிறது.
தொட்டால் பூ மலரும், பாடல் ஒலிக்கும், காட்சி தெரியும், கோப்பு நகரும், இணையத்திற்கு இணைப்புக் கிடைக்கும் என அடுக்கிக் கொண்டே செல்லக்கூடிய சாத்தியங்களை உருவாக்கிய தொழில்நுட்பம் தான் தொடுதிறன் தொழில்நுட்பம் என வழங்கப்படும் Touch Technology ஆகும்.
Mouse இன் மௌசை குறைக்குமளவில் வியாபித்து வரும் Touch தொழில்நுட்பம் இன்றைய நிலையில் அதிகமான இலத்திரனியல் சாதனங்களின் இணைக்கப்பட்டதாக விற்பனைக்கு வருகின்றது. சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, அன்றைய காலம் முதல் ஒரு சில தொழில்நிலைச் சாதனங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இன்றைய நிலையில் அநேக சாதனங்களில் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம் அதன் முழு நிலை அபிவிருத்தியையும் அடைந்து விட்டதா என்பதை இன்றைய கேள்வியாகும். அதாவது, சுருக்கமாக, தொடுதிறன் தொழில்நுட்பம் வயதுக்கு வயதுவிட்டதா? என கேட்கலாம்.
கடந்த வருடம் (2007) மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த மேசைக் கணினி மற்றும் அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone என்பன Touch தொழில்நுட்பத்தையே தம்வசம் உயிர்நாடிக் கூறாகக் கொண்டிருக்கிறது.
5000 ஸ்டெலிங் பவுன்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் மைக்ரொசொப்டின் Surface மேசைக் கணினியானது, வீடுகளில் பாவனைக்காக அதிகமாகப் பாவனைக்கு வருமென எதிர்பார்க்க முடியாது. இந்த மேசைக் கணினிகள் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகளை ஓடர் செய்யவும், இணையத்தை வலம் வருவதற்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த மேசைக்கணினியின் விலை குறையும் போது, இது அதிகளவில் வீடுகளிலுள்ள சுவர் மற்றும் தளபாடம் ஆகியவற்றில் அமையப் பெற்றுவிடுமென மைக்ரொசொப்ட் நிறுவனம் நம்பிக்கை வெளியிடுகிறது.
தொடுதிறன் தொழில்நுட்பத்தின் மீது மைக்ரொசொப்ட் நிறுவனம் அதிக சிரத்தை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 2007 ஜனவரி மாதம் விஸ்டா பணிசெயல் முறைமை வெளியிட்ட தருணத்திலேயே, TouchSmart எனும் பெயரில் அமைந்த தொடுதிறன் தொழில்நுட்ப சாத்தியத்தைக் கொண்ட கணினியை உற்பத்தி செய்ய Microsoft ஆனது, Hewlett Packard கணினி நிறுவனத்துடன் இணைந்து கடமையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.
“விஸ்டாவிற்கு பொருத்தமான வன்பொருள் நிலைகளை தன்னகம் கொண்டதே, இந்தத் தொடுதிறன் தொழில்நுட்பக்கணினியாகும்” என Hewlett Packard நிறுவனத்தின் Rob Crampton தெரிவிக்கின்றார்.
கணினிகளை மக்கள் அதிகளவில் பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் நிழற்படங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கவே பயன்படுத்துகின்றனர். இதனால் விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse) என்பனவற்றின் பயன்பாடு அதிகளவில் தேவைப்படாது என்றே நான் நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
“வினோதாம்சத்திற்காக கணினி பயன்படுத்தப்படும் போது, அக்கணினி வினோதாம்சத்திற்கே உரித்தான சாதனங்கள் கொண்டுள்ள எளிமையான நிலைகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்தானே!” என அவர் தெரிவிக்கிறார்.
Keyboard இன் பாவனையை முற்றாக நாம் விட்டுவிடவும் முடியாது. சாதாரணமாக மின்னஞ்சல் ஒன்றை எழுதி அனுப்பும் நிலையில் Keyboard இன் பங்கே பிரதானம். ஆனாலும், நிழற்படம், திரைப்படம், பாடல் போன்றவற்றை ஒழுங்கமைத்துக் கொள்ள அது அவ்வளவில் தேவைப்படாது.
மக்கள் தமது வரவேற்பறை மற்றும் சமையலறை ஆகியவற்றில் கணினியை அல்லது கணினியை உயிர்ப்பிக்கச் செய்யும் Button ஐ வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த தொடுதிறன் கணினியின் திரையை இரு தடவை தொட்டதுமே வானொலி ஒலிக்கத் தொடங்கும் அது மட்டுமா, நான்கு தடவை தொட்டால் நிழற்படமானது, அச்சாகத் தொடங்குமென அவர் தொடுதிறன் கணினியின் சாத்தியத்தை கூறி வியக்கிறார்.
தொடுதிறன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிவந்த முதல் கையடக்கத் தொலைபேசியாக Apple இன் iPhone இல்லாதபோதும், மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பு, ஆதரவு என்பன வியப்பிற்குரியன.
இதேவேளை, தாய்வானின் கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான HTC ஆனது, TouchFLO என்ற தொடுதிறன் தொழில்நுட்பத்தைப் கொண்ட புதிய கையடக்கத் தொலைபேசியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியானது, iPhone ஐப் போலல்லாது, ஒரு சில முன்னேற்றகமான தொழிற்பாட்டு நிலைகளைக் கொண்டதாக சொல்லப்படுகிறது.
iPhone இல் இலகுவில் குறுஞ்செய்திகளை Type செய்ய முடியாமலுள்ளது ஒரு பிரதிகூலமாகுமெனவும், ஆனால், வடிவமைப்பு தொடர்பில் மிகவும் நேர்த்தியான உற்பத்திப் பொருள் இது எனவும் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
Apple நிறுவனத்தின் iPhone இன் வடிவமைப்பைத் தோற்கடித்து முன்னிற்கும் வகையில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு எந்த தயாரிப்பு வெளிவராது. அத்தோடு touch screen வீடியோ iPod மற்றும் தொடுதிறன் தொழில்நுட்பத்தைக் கொண்ட Apple TV போன்றன பாவனைக்கு விரைவில் வரலாம் என எதிர்வுகூறலாம்” என விமர்சகர் Benjamin Reitzes கருத்துத் தெரிவிக்கிறார்.
ஹொலிவூட் திரைப்படங்களில் வியப்பு நிலைகளாகக் காட்டப்பட்;ட விஞ்ஞானப் புனைக்கதைகளின் வடிவங்களாக அமைந்திருந்த தொடுதிறன் ஆற்றல்கள் இன்றளவில் நிஜமாகி மக்களை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருப்பது தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியையே பறைசாற்றி நிற்கின்றது.
பல்நிலை தொடுதிறன் தொழில்நுட்ப சாத்தியங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியான Jefferson Han தனது ஆராய்ச்சியின் விளைவால் உருவாக்கிய தொழில்நுட்ப வருவிளைவை வுநுனு (Technology Entertainment Design) எனப்படும் மாநாட்டில் காண்பித்து பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டார்.
2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முந்திய மாநாட்டின் போது, தனது கையிலிருந்த நிழற்படங்களை திரையில் அதிசயத்தக்க வகையில் தோன்றச் செய்ததன் பின்னர், “இயந்திரங்களுடன் நாம் இந்த வகையிலேயே இடைத்தொடர்பில் ஈடுபட வேண்டும்;” என குழுமியிருந்த பார்வையாளர்களை நோக்கி கூறினார்.
பௌதீக சாதனங்களின் நிலைகளுக்கேற்ப நாம் மாறுவதற்கு இந்தக் காலத்தில் கட்டாயமான அவசியமேதும் இல்லை. எமது விருப்புகளிற்கேற்பவே பௌதீக சாதனங்கள் பணியாற்றத் தொடங்க வேண்டும் என தனது விருப்பை அன்று வெளியிட்டார்.
சில அமைவிட மென்பொருள்கள், ஒரு சோடி கைகள் மற்றும் 2.4 அங்குல திரை ஆகியனவற்றைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமென இவ்வருடம் இடம்பெற்ற மாநாட்டின் போது, அவர் தெளிவாகக் காண்பித்தார்.
இரண்டு கைகளினதும் தொடுகையின் காரணமாக உண்டாகும் அசைவு மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் மூலமாக உணர்வைப் பெறும் திரையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் சிலிக்கனானது, பயனர்களின் விருப்பக் கட்டளைகளை வெகு நேர்த்தியாக செய்யும் தகவுடையதாகக் காணப்பட்டது. இந்தத் திரைகள் மிகவும் விலையுயர்ந்தவையாகும். ஆனாலும், சில நிறுவனங்கள் இதனைக் கொள்வனவு செய்வதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக hயn தெரிவிக்கிறார்.
Perceptive Pixel எனும் நிறுவனமானது, பல்நிலை தொடுதிறன் தொழில்நுட்பத்தைக் (Multi-touch technology) கொண்டமைந்த மேசைகளை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் திரைகள் கடைகளிலும், நூதனசாலைகளிலும் காணப்படும் சுவர்களில் அமையப்பெற்று தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் சாத்தியங்களை உணர்த்தக்கூடும்.
மைக்ரொசொப்ட் இந்தத் தொடுதிறன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பால் அதிக கவனம் செலுத்திய போதும், Mouse இல்லாத யுகமொன்றுக்கு கணினிகளை இட்டுச் செல்வதில் அவ்வளவு அக்கறையை அது காட்டவில்லை.
1980 களிலிருந்து தொடுதிறன் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மைக்ரோசொப்டின் பிரதான ஆராய்ச்சியாளர் Bill Buxton அண்மையில் வெளியிட்ட தனது ஆராய்ச்சி தொடர்பான அறிக்கையான “Multi-Touch Systems that I have known and loved” என்ற தலைப்புடைய அறிக்கையில், தொடுதிறன் தொழில்நுட்பம் Mouse இன் மௌசைப் போக்கிவிடும் என்ற கூற்றை முற்றாக நிராகரிக்கிறார்.
“Mouse இன் துணையில்லாமல் கணினியில் பல காரியங்களை மிக இலகுவாகச் செய்து கொள்ள முடியாது. பல விடயங்களை கணினியில் ஆற்றுவதற்கு Mouse மிகவும் உயிர்ப்பான சாதனமாகும். Mouse உடன் சேர்ந்து இயங்கும் தொடுதிறன் சாத்தியங்களைக் கொண்ட கணினிகளே காலத்தின் தேவையாகும். இதுவே பயனர்களின் வேலைகளை துரிதமாகச் செய்து கொள்ள வழிகோலும்” என அவர் அவ்வறிக்கையில் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.
TouchSmart போன்ற ஏனைய சாதனங்களின் வருகையானது, மென்பொருள் உற்பத்தியாளர்கள் தமது மென்பொருள் வடிவமைப்புகளில் தொடுதிறன் சாத்தியங்களையும் இணைத்து வடிவமைக்க வேண்டியதை உணர்த்துகின்ற நுழைவாயில் ஆகுமென Hewlett-Packard இன் Crampton கூறுகிறார்.
தொடுதிறன் தொழில்நுட்பம் வயதுக்கு வந்துவிட்டதாக அவர் திடமாக நம்புகிறார்.
“இன்னும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் தொடுதிறன் தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகள் வீடுகளில் மிகவும் பிரபல்யமடையுமென நான் எண்ணுகிறேன்” என அவர் எதிர்வுகூறுகிறார்.
தொட்டால்… கணினியில் நிகழ்த்த நினைக்கும் விடயங்களை சாத்தியமாக்கலாம். இது புதிய யுகம். தொடுதிறன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அவத்தை. எமது அன்றாட நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் கூறாக மாறியுள்ள இந்த Touch Technology இன் வியாபிப்பை கண்டு வியக்காமல் என்ன செய்வது….???
Google மற்றும் Yahoo என்பன இருவாரங்களுக்கு இணைகின்றன ஏப்ரல் 10, 2008
Posted by உதய தாரகை in Internet, News.add a comment
உலகின் இணையத்தின் தேடல் பொறிகளின் ஜாம்பவான்களான yahoo மற்றும் google ஆகியன சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு விளம்பர இடத்தைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
இந்த முன்னெடுப்பானது, Microsoft ஐ எரிச்சலூட்டவதற்காகவே செய்யப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். Microsoft ஆனது, Yahoo ஐ விலைக்கு வாங்க முனைப்புகளை மேற்கொண்டு வருகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
இந்த அதிசயமான மற்றும் வரலாற்று முக்கியத்துவமான இரண்டு ஜாம்பவான்களின் இரண்டு வாரங்களுக்கான இணைப்பின் மூலம் இணைய உலகில் புதிய மாற்றங்கள் முன்னேற்றகரமாக ஏற்பட வாய்ப்புள்ளதென எதிர்பார்க்கலாம்.
இந்த விடயம் சார்பான பூரண செய்தியை இங்கே வாசிக்கலாம் [செய்தி இணையத்தளம்]
- உதய தாரகை
இப்படியும் நடக்கிறது… ஏப்ரல் 8, 2008
Posted by உதய தாரகை in Funny, Internet.1 comment so far
அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட Domain name ஒன்றை சுமார் 2.6 மில்லியன் அமெரிக்க் டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். என்ன மூக்கின் மேல் விரல் வைக்கிறீர்களா? அதிசயம் தான் ஆனால் உண்மை.
இவர் பெயரில் பதிவாகியிருந்த Pizza.com என்ற Domain name ஐயே அவர் ஏலத்தில் விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளார். முதலில் ஏலத்தொகை வெறும் 100 டொலர்களாகவே காணப்பட்டுள்ளது. ஒரு கிழமைக்குள் அது 2.6 மில்லியன் அமெரிக்க டொலராக மாறியுள்ளது. வித்தியாசமான வியப்பே….
இது தொடர்பான பூரண தகவல்களை அறிந்து கொள்ள [செய்தி இணையத்தளம்]
- உதய தாரகை
Firefox 3 Beta 5 ஐ இப்போது Download செய்யலாம் ஏப்ரல் 4, 2008
Posted by உதய தாரகை in Firefox, Internet, Software.add a comment
Mozilla Firefox தனது மிகப் பிந்திய Firefox 3 இனை Download செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தப் புதிய பதிப்பில் முந்திய Beta பதிப்பிலிருந்து 750 முன்னேற்றகரமான மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பினைப் பயன்படுத்தி Gmail, Zoho போன்ற மிக வேகமாக Load செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
புதிய Firefox இன் பதிப்பை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். வேகமான இணைய இணைப்பின் அனுபவத்தை உணர்வீர்கள்.
Mozilla Firefox 3 ஆனது, எதிர்வரும் ஜுன் மாதம் பூராண பதிப்பாக வெளியிடப்படவுள்ளது.
பதிவிறக்கம் செய்வதற்கான முகவரி: http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html
உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
- உதய தாரகை
இது ரொம்ப பெரியது! ஏப்ரல் 4, 2008
Posted by உதய தாரகை in Funny, Internet.1 comment so far
இணையத்தளங்களின் முகவரிகளை சுருக்கமாக வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவர். இவ்வாறு நீளமான இணைய முகவரிகளை சுருக்கித் தரும் இணையச் சேவைத்தளங்களும் இணையப்பரப்பிலே காணப்படுகின்றன. இது இவ்வாறிருக்க, இப்படியொரு இணைய முகவரி கொண்ட தளம் காணப்படுகின்றது.
இணைய முகவரியை வாசிக்க முன் மூச்சையொருமுறை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். ம்…. இப்போது வாசியுங்கள்.
http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.com
என்ன தலைசுற்றுகிறதா? இதுவும் ஒரு இணைய முகவரிதான். ஒரு வரியில் இந்த இணையத்தளத்தின் பெயரை முழுமையாக எழுத இடம் போதாது என்பதையும் கவனிக்க.
இந்த இணையத்தளம் என்ன சேவையை வழங்குகின்றது என அறீவீர்களா? இலவசமாக பயனர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை வழங்குகின்றது. உலகிலேயே மிக நீளமான மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பெற விரும்பினால் இந்தத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் வழங்கிய User name இனை இணைத்து @ என்ற குறியீட்டிற்கு பின்னால், இவ்விணையத்தளத்தின் முகவரியைக் கொண்டதான மின்னஞ்சல் முகவரியைப் பெறலாம். ஆனாலும் இது ரொம்பவும் பெரியதுதான்.
இப்படியொரு முகவரியைப் பெற்று நீங்கள் உங்கள் நண்பரிடம் email அனுப்பச் சொன்னால், நண்பர் உங்கள் மின்னஞ்சல் முகவரியை Type செய்ய… ஒரே கலாட்டாதான்… It’s very funny…
கொஞ்சம் உங்கள் நண்பரைக் குழப்பித்தான் பாருங்களேன்.
- உதய தாரகை
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன? ஏப்ரல் 2, 2008
Posted by உதய தாரகை in Gmail, Internet.1 comment so far
Gmail இல் Chat செய்ய முடியுமென்பது நீங்கள் அறிந்த விடயமே. அங்கு நீங்கள் ழn இல் இருக்கும் போது, உங்கள் பெயருக்கு எதிரே பச்சை நிறத்தில் ஒரு வட்டக்குறியீடு காணப்படும். அதேவேளை உங்கள் Contact list இல் இருக்கும் contacts இல் குறித்த நேரத்தில் Gmail இல் log ஆகி இருப்போரின் பெயருக்கு எதிரேயும், பச்சை நிற வட்டக்குறியீடு காணப்படும். இந்த அடையாளங்கள் மூலம் யார் யார் online இல் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால், நாம் Gmail இல் Online இல் இருக்கும் போதே ஏனையோருக்கு நாம் Offline இல் இருப்பது போன்று காட்டமுடியும். அதே நேரம் online இல் இருக்கும் ஏனையவர்களையும் கண்டு கொள்ளவும் முடியும். இதனை Google தனது Gmail சேவை மூலம் வழங்கியுள்ளது.
Chat என்ற இடது பக்கத்திலிருக்கும் நிலையில் உங்கள் பெயருக்குக் கீழே காணப்படும் Drop down menu ஐ கிளிக் செய்ய தோன்றும் Menu இல், Invisible என்ற Option ஐ கிளிக் செய்தால் போதும்.

நீங்கள் ஏனையோருக்கு மறைந்து காணப்படுவீர்கள். ஆனால், Online இருக்கும் ஏனையோரை உங்களால் கண்டு கொள்ள முடியும்.

செய்து தான் பாருங்களேன்.
- உதய தாரகை
கடவுச்சொல்லின் வலிமையைக் கண்டறிதல் ஏப்ரல் 1, 2008
Posted by உதய தாரகை in Internet, Useful Website.1 comment so far
இணையப்பரப்பில் Password என்று சொல்லப்படும் கடவுச்சொல்லுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த கடவுச்சொல் மூலமே அனைத்து விதமான சகல இணையச் சேவை நிலைகளும் மிகத் தெளிவாக நடைமுறை செய்யப்படுகின்றன. இந்தக் கடவுச் சொல்களை எவரும் அனுமானிக்க முடியாத வகையில் அமைத்துக் கொள்ளல் கட்டாயமான தேவையாகும். அப்போதுதான், இணையப் பரப்பில் எமது தனிமனித சுதந்திரத்திற்கு உரித்தான பாதுகாப்புக் கிடைக்கும்.
உங்கள் கடவுச்சொல்களின் வலிமை எந்தளவில் காணப்படுகின்றது என்பதை சொல்லும் இணையச் சேவையைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன்.
The Password Meter என்ற இணையத்தளம் நீங்கள் உங்களது கடவுச்சொல்லை Type செய்யும் போது, அதன் உறுதியை (மற்றவர்களால் அனுமானிக்க முடியாதா? முடியுமா? ) சதவீத அளவில் தெளிவாகச் சொல்லும். இனியென்ன உங்கள் கடவுச் சொல்லும் கண்டுபிடிப்பதற்கு கஷ்டமானதாக இருக்கிறதா? எனக் கண்டறியுங்கள்..
- உதய தாரகை
இலவச ஞாபகப்படுத்தல் சேவை மார்ச் 31, 2008
Posted by உதய தாரகை in Internet, Useful Website.2 comments
நீங்கள் அன்றாட வாழ்வில் நாளாந்தம் எத்தனையோ விடயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறீர்கள் என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மிக வேகமான நேரமேயில்லாத நிலையில் முக்கியமான சில நிகழ்வுகள் கூட உங்களால் மறக்கப்பட்டு விடலாம்.
அவற்றை குறித்த நாளில் உரிய நேரத்திற்கு ஞாபகப்படுத்தித் தரும் சேவையாக YourLi.st என்ற இணையத்தளத்தைக் குறிப்பிடலாம். இதில் என்ன விசேடம் தெரியுமா? எமக்குத் தேவையான Reminder களைப் பெற்றுக் கொள்ள அவ்விணையத்தளத்தில் Register ஆக வேண்டிய கட்டாயமில்லை.
எமது மின்னஞ்சலையும், குறித்த ஞாபகப்படுத்தலின் நாளையும் குறித்துக் காட்டினால் போதும். உங்களை உரிய நேரத்திற்கு மறக்காமல் ஞாபகப்படுத்தும்.
சென்றுதான் பாருங்களேன்.
Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! மார்ச் 30, 2008
Posted by உதய தாரகை in Internet, Special Feature.add a comment
இன்றைய காலகட்டத்தில் அதிகமான மென்பொருள்கள் இணையத்தின் மூலமாக Download செய்துகொள்ளப்படக்கூடிய வகையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை இலவசமாகவே பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் காணப்படுவது முக்கிய விடயமாகும். ஆனாலும், இவ்வாறு Download செய்யக்கூடிய வகையில் அமைந்த மென்பொருள்களோடு சேர்ந்தாற்போல். Spyware மற்றும் வைரஸ் போன்றவைகள் கணினியிற்கு Download ஆகும் அபாயங்களும் காணப்படுகின்றன.இப்படியிருப்பதனால், இணையத்திலிருந்து எதனையும் Download செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுக்கமுடியுமா என்ன?
Download ஆகும் மென்பொருள்களோடு Spyware இணைந்து காணப்படுவது மிகவும் பொதுவான விடயமாக மாறியுள்ளது. இந்த Spyware களின் மூலம், பயனர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கின்றனர்.
இந்த வகையான Spyware களை நீக்கிக்கொள்ள பல நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையிலுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி Spyware களை எமது கணினியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம். கணினியைப் பாதிக்கக்கூடிய நாசகார மென்பொருள்களை நம்மை அறியாமலேயே எமது கணினியில் நிறுவுவதற்கு எமக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு சில முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
Download செய்ய ஆரம்பிக்கும் முன்னர், குறித்த மென்பொருளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மையை அறிந்துகொள்வது கட்டாயமானதாகும். குறித்த மென்பொருள் பற்றி ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் என்ன குறிப்பிடப்படுள்ளது? இதனைப் பாவித்த ஏனையோர் இதனைப் பற்றி என்ன கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பிரபலமான தேடற்பொறியொன்றை Open செய்து (Google, Yahoo) அதில் பதிவிறக்கம் (Download) செய்யவேண்டிய கோப்பின் பெயர், மென்பொருளின் பெயர், மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை Type செய்து தேடுங்கள். Spyware தொடர்பாக, குறித்த மென்பொருளோடு, அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால், அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி (Search Engine) பட்டியற் படுத்தித்தரும்.
Download செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்வதற்கு முன்னர், அதில் Virus தாக்கமேதும் உள்ளதா என கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பரிசோதிக்காமல் நிறுவினால் சிலவேளை மென்பொருளோடு சேர்ந்து உங்கள் கணினியில் Virus உம் நிறுவப்பட்டு விடலாம். இதனால் கணினியின் நிலை கவலைக்கிடமாகிவிடலாம்.
எல்லாவற்றைவிடவும், உங்கள் கணினியிலுள்ள தரவுகளை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware, Virus என எது கணினியில் குடிகொண்டு கணினியை கதிகலங்க வைத்தாலும், கவலையே படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம். எமக்குத் தேவையான தரவுகள் யாவும் Backup செய்து வைத்துள்ளோமே என்ற துணிவுதான்.
இக்கட்டுரையில் சேர்க்கப்படாத, நீங்கள் அறிந்த முற்காப்பு நடவடிக்கைகளை மறுமொழியுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!
- உதய தாரகை
DOCX கோப்பை IE இல் Open செய்தல் மார்ச் 27, 2008
Posted by உதய தாரகை in Internet, Software.add a comment
Microsoft நிறுவனத்தின் மிகப் பிந்திய Office Package ஆன, Microsoft Office 2007 இல் அதன் கோப்புகள் யாவும் .docx என்ற நீட்டிப்புடனே சேமிக்கப்படும். இதனை Open செய்து பார்ப்பதற்கு எம்மிடம் Microsoft Office 2007 மென்பொருள் தொகுதி கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

அவ்வாறு Microsoft Office 2007 நிறுவப்படாமலேயே DOCX கோப்புகளை IE இல் Open செய்து பார்ப்பதற்கான வழியொன்று உள்ளது. அது என்னவென உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
முதலில் நீங்கள் உங்களிடமுள்ள DOCX File ஐ ZIP File ஆக மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை குறித்த .docx என்ற extension ஐ .zip என்ற extension ஆக மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile.docx என்பதை myfil.zip என மாற்ற வேண்டும்.
பின்னர், மாற்றிப் பெறப்பட்ட zip folder ஐ unzip செய்து கொண்டு, குறித்த unzip folder இல், word என்ற folder ஐக் காண்பீர்கள். அதனுள் document.xml என்ற File காணப்படும்.
அதனை, IE (Internet Explorer) மூலம் Open செய்து குறித்த docx file இல் காணப்பட்ட text ஐ அறிந்து கொள்ளலாம். செய்துதான் பாருங்களேன்.
- உதய தாரகை
