சொல்லித் தரவா? ஏப்ரல் 3, 2008
Posted by உதய தாரகை in Windows.trackback
உங்கள் கணினியானது எந்தச் சலனமும் இல்லாமல் இயக்கமேயின்றி இருந்தால், நீங்கள் Ctrl+Alt+delete ஆகிய keyகளை ஒரே தடவையில் அழுத்தி உயிர்ப்படையச் செய்ய முயற்சி செய்திருப்பீர்கள். உண்மையில் Task Manager ஐ திரையில் கொண்டு வரவே இந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?
இந்த Task Manager ஐ நீங்கள் பெற்றவுடன் அதில் Not Responding எனும் நிலையிலுள்ள Program களை Select செய்து, End task செய்வதன் மூலம், உங்கள் கணினி பழைய நிலைக்குத் திரும்பி, வேலை செய்யத் தொடங்கும். Task Manager ஐ இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் இன்னொரு வழியை உங்களுக்குச் சொல்லித் தரவா?
Ctrl, Shift மற்றும் Escape ஆகிய key களை ஒரே தடவையில் நீங்கள் அழுத்தினால், Windows Task Manager உங்கள் திரையில் தோன்றும். ரொம்ப இலேசு!
செய்துதான் பாருங்களேன்.
- உதய தாரகை
இந்த கீக்களின் வரலாறு குறித்து இங்கே காணலாம்:
http://en.wikipedia.org/wiki/Control-Alt-Delete
வைரஸ்கள் ஏமாற்ற முடியாதவாறு விண்டோஸ் மட்டுமே இந்த கீக்களை புரிந்து கொள்ளும்.