jump to navigation

இலவச ஞாபகப்படுத்தல் சேவை மார்ச் 31, 2008

Posted by உதய தாரகை in Internet, Useful Website.
2 comments

7.jpgநீங்கள் அன்றாட வாழ்வில் நாளாந்தம் எத்தனையோ விடயங்களில் உங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறீர்கள் என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உங்கள் மிக வேகமான நேரமேயில்லாத நிலையில் முக்கியமான சில நிகழ்வுகள் கூட உங்களால் மறக்கப்பட்டு விடலாம்.

8.jpg

அவற்றை குறித்த நாளில் உரிய நேரத்திற்கு ஞாபகப்படுத்தித் தரும் சேவையாக YourLi.st என்ற இணையத்தளத்தைக் குறிப்பிடலாம். இதில் என்ன விசேடம் தெரியுமா? எமக்குத் தேவையான Reminder களைப் பெற்றுக் கொள்ள அவ்விணையத்தளத்தில் Register ஆக வேண்டிய கட்டாயமில்லை.

எமது மின்னஞ்சலையும், குறித்த ஞாபகப்படுத்தலின் நாளையும் குறித்துக் காட்டினால் போதும். உங்களை உரிய நேரத்திற்கு மறக்காமல் ஞாபகப்படுத்தும்.

சென்றுதான் பாருங்களேன்.

Download செய்கிறீர்களா? அவதானம் தேவை!! மார்ச் 30, 2008

Posted by உதய தாரகை in Internet, Special Feature.
add a comment

5.jpgஇன்றைய காலகட்டத்தில் அதிகமான மென்பொருள்கள் இணையத்தின் மூலமாக Download செய்துகொள்ளப்படக்கூடிய வகையில் வழங்கப்படுகின்றன. இவற்றில் அநேகமானவை இலவசமாகவே பதிவிறக்கம் செய்யக்கூடிய வகையில் காணப்படுவது முக்கிய விடயமாகும். ஆனாலும், இவ்வாறு Download செய்யக்கூடிய வகையில் அமைந்த மென்பொருள்களோடு சேர்ந்தாற்போல். Spyware மற்றும் வைரஸ் போன்றவைகள் கணினியிற்கு Download ஆகும் அபாயங்களும் காணப்படுகின்றன.இப்படியிருப்பதனால், இணையத்திலிருந்து எதனையும் Download செய்து கொள்ளக் கூடாது என்ற முடிவை எடுக்கமுடியுமா என்ன?

Download ஆகும் மென்பொருள்களோடு Spyware இணைந்து காணப்படுவது மிகவும் பொதுவான விடயமாக மாறியுள்ளது. இந்த Spyware களின் மூலம், பயனர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து அவற்றை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்து மென்பொருள் வழங்குனர்கள் இலாபமீட்டிக் கொள்கின்றனர்.

இந்த வகையான Spyware களை நீக்கிக்கொள்ள பல நம்பகமான மென்பொருள்கள் இப்போது பாவனையிலுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி Spyware களை எமது கணினியிலிருந்து நீக்கிவிட வழி செய்யலாம். கணினியைப் பாதிக்கக்கூடிய நாசகார மென்பொருள்களை நம்மை அறியாமலேயே எமது கணினியில் நிறுவுவதற்கு எமக்கு சந்தர்ப்பங்கள் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு சில முற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது கட்டாயமானதாகும்.

Download செய்ய ஆரம்பிக்கும் முன்னர், குறித்த மென்பொருளின் உறுதிப்படுத்தப்பட்ட தன்மையை அறிந்துகொள்வது கட்டாயமானதாகும். குறித்த மென்பொருள் பற்றி ஏனைய நம்பகமான இணையத்தளங்களில் என்ன குறிப்பிடப்படுள்ளது? இதனைப் பாவித்த ஏனையோர் இதனைப் பற்றி என்ன கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்கள் என்பதையெல்லாம் அறிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பிரபலமான தேடற்பொறியொன்றை Open செய்து (Google, Yahoo) அதில் பதிவிறக்கம் (Download) செய்யவேண்டிய கோப்பின் பெயர், மென்பொருளின் பெயர், மற்றும் Spyware என்ற சொல் ஆகியவற்றை Type செய்து தேடுங்கள். Spyware தொடர்பாக, குறித்த மென்பொருளோடு, அதனைப் பாவித்தவர்கள் பிரச்சினைகளை அனுபவித்திருந்தால், அது தொடர்பான விடயங்களை தேடற்பொறி (Search Engine) பட்டியற் படுத்தித்தரும்.

Download செய்த மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்வதற்கு முன்னர், அதில் Virus தாக்கமேதும் உள்ளதா என கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். பரிசோதிக்காமல் நிறுவினால் சிலவேளை மென்பொருளோடு சேர்ந்து உங்கள் கணினியில் Virus உம் நிறுவப்பட்டு விடலாம். இதனால் கணினியின் நிலை கவலைக்கிடமாகிவிடலாம்.

எல்லாவற்றைவிடவும், உங்கள் கணினியிலுள்ள தரவுகளை அடிக்கடி Backup செய்து கொள்வது மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும். தவறுதலாக அல்லது கவனக்குறைவாக Spyware, Virus என எது கணினியில் குடிகொண்டு கணினியை கதிகலங்க வைத்தாலும், கவலையே படாமல் கணினியை Restore செய்து கொள்ளலாம். எமக்குத் தேவையான தரவுகள் யாவும் Backup செய்து வைத்துள்ளோமே என்ற துணிவுதான்.

இக்கட்டுரையில் சேர்க்கப்படாத, நீங்கள் அறிந்த முற்காப்பு நடவடிக்கைகளை மறுமொழியுடன் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

- உதய தாரகை

கோப்புறையின் பெயர் வேண்டாமா? மார்ச் 30, 2008

Posted by உதய தாரகை in Windows.
add a comment

Windows Explorer இல் Thumbnail, Icon, Tiles போன்ற பார்வை இடைமுகங்களை நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள். Folder ஒன்றுக்குள் நிழற்படங்கள் பலவுள்ளன என வைத்துக் கொள்வோம். நீங்கள், அந்நிழற்படங்களை Thumbnail நிலையில் காணவேண்டும். ஆனால், நிழற்படங்களின் File name கள் திரையில் தோன்றக்கூடாது என நினைக்கிறீர்கள். இதனை எவ்வாறு செய்வீர்கள்?

6.jpg

இதனை மிக இலகுவாகச் செய்யலாம். நீங்கள் Shift Key அழுத்திய வண்ணம் பார்வை இடைமுகத்தை Thumbnail ஆக மாற்ற கோப்புகளின் பெயர்கள் இல்லாமல் Thumbnail களாக மட்டும் கோப்புகள் காட்சியாகும். கோப்புகளின் பெயர்களைத் திரையில் தோன்றவைக்க மீண்டும் அவ்வாறு செய்தால் போதும். முயன்றுதான் பாருங்களேன்!

- உதய தாரகை

DOCX கோப்பை IE இல் Open செய்தல் மார்ச் 27, 2008

Posted by உதய தாரகை in Internet, Software.
add a comment

Microsoft நிறுவனத்தின் மிகப் பிந்திய Office Package ஆன, Microsoft Office 2007 இல் அதன் கோப்புகள் யாவும் .docx என்ற நீட்டிப்புடனே சேமிக்கப்படும். இதனை Open செய்து பார்ப்பதற்கு எம்மிடம் Microsoft Office 2007 மென்பொருள் தொகுதி கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

microsoft-office-professional-2.jpg

அவ்வாறு Microsoft Office 2007 நிறுவப்படாமலேயே DOCX கோப்புகளை IE இல் Open செய்து பார்ப்பதற்கான வழியொன்று உள்ளது. அது என்னவென உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

முதலில் நீங்கள் உங்களிடமுள்ள DOCX File ஐ ZIP File ஆக மாற்றிக் கொள்ள வேண்டும். இதனை குறித்த .docx என்ற extension ஐ .zip என்ற extension ஆக மாற்ற வேண்டும். எடுத்துக்காட்டாக, myfile.docx என்பதை myfil.zip என மாற்ற வேண்டும்.

பின்னர், மாற்றிப் பெறப்பட்ட zip folder ஐ unzip செய்து கொண்டு, குறித்த unzip folder இல், word என்ற folder ஐக் காண்பீர்கள். அதனுள் document.xml என்ற File காணப்படும்.

அதனை, IE (Internet Explorer) மூலம் Open செய்து குறித்த docx file இல் காணப்பட்ட text ஐ அறிந்து கொள்ளலாம். செய்துதான் பாருங்களேன்.

- உதய தாரகை

உங்கள் Pen drive இல் U3 தொல்லையா? மார்ச் 26, 2008

Posted by உதய தாரகை in Hardware, Pen drive, Software.
add a comment

அநேகமாக Pen drive ஐ வாங்கும் போது, அதில் சேமிக்கும் தரவுகளை ஒழுங்கமைவாக கடவுச் சொல்லிட்டு பாதுகாக்க வழிசெய்யும் பொருட்டு குறித்த Pen drive உடனேயே U3 எனப்படும் மென்பொருளும் நிறுவப்பட்ட நிலையில் கிடைக்கிறது.

u3smart.gif கணினியோடு Pen drive ஐ இணைக்கும் போது, குறித்த U3 மென்பொருள் இயங்கத் தொடங்கும். கடவுச் சொல் கொடுக்கப்பட்டிருந்தால் கடவுச் சொல்லை வழங்குமாறு பணிக்கும். அத்தோடு, Pen drive உள்ள தரவுகளையும் தெளிவான வகையில் பெற்றுக் கொள்ளவும் வழி செய்யும்.

ஆனாலும், இந்த மென்பொருள் Pen drive ஐ கணினியுடன் இணைக்கும் போதெல்லாம் இயங்கத் தொடங்குவது எரிச்சலைத் தரும் நிகழ்வுதான். ஆக, U3 மென்பொருள் உங்களுக்குத் தொல்லையா? அதனை Pen drive இலிருந்து இலகுவாக delete செய்வதன் மூலம் நீக்கிக் கொள்ள முடியாது.

ஆனாலும் கவலையை விடுங்கள். இதோ இருக்கிறது அதற்குப் பரிகாரம்.

U3 Software ஐ உங்கள் Pen drive இலிருந்து அகற்றும் பணியைச் செய்யும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை உங்கள் Pen drive இல் இயங்கச் செய்யுங்கள். அவ்வளவுதான் இனி U3 தொல்லையே இல்லை.

U3 uninstaller – [இங்கே கிளிக் செய்யுங்கள்]

முக்கிய குறிப்பு: நீங்கள் U3 Software ஐ உங்கள் Pen drive இலிருந்து அகற்ற முன், உங்கள் Pen drive இலுள்ள உங்களது Data களை வேறொரு இடத்தி்ல் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் (Hard diskஇல்). இல்லாவிட்டால் உங்கள் Pen drive இல் காணப்படும் அனைத்து Data வும் அழிந்துவிடும்.

- உதய தாரகை

உங்களது இணைய இணைப்பின் வேகம் என்ன? மார்ச் 26, 2008

Posted by உதய தாரகை in Internet.
add a comment

நீங்கள் எப்போதாவது உங்களது இணைய இணைப்பின் வேகம் எவ்வளவு இருக்குமென நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? உண்மையில் நீங்கள் நினைத்திருந்தால் அதனைக் கண்டறிவதற்கு ஒரு இணையச் சேவையொன்று உள்ளது.

4.jpg

இங்கு 14.4 modem என்ற இணைய இணைப்பு வேகத்திலிருந்து உயர் இணைப்பு வேகமான T4 வரைக்கும் அனைத்து வேக எல்லைகளையும் கண்டறிந்து வரைபு மூலம் தரக்கூடிய ஆற்றலைக் கொண்டது.

Internet Frog [இங்கே கிளிக் செய்யுங்கள்]

சென்றுதான் பாருங்களேன். உங்கள் இணைய இணைப்பின் வேகத்தையும் கண்டறியுங்கள்.

- உதய தாரகை

வேகமாக Windows ஐ Shut down செய்தல் மார்ச் 26, 2008

Posted by உதய தாரகை in Windows.
add a comment

Windows ஐ Shut down செய்ய நீங்கள் முனைந்தால் அதனை வேகமாகச் செய்து கொள்ள முடியாமல் போயிருக்கும்.

அதனை வேகப்படுத்த மிகவும் இலகுவான வழியொன்று (கொஞ்சம் அதிகமான படிகளை மேற்கொள்ள வேண்டும்) உள்ளதாக இன்று நான் ஒரு வலைப்பதிவில் கண்டு கொண்டேன்.

அந்த விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

Shut down Windows in an instant -[இங்கே கிளிக் செய்யுங்கள்]

- உதய தாரகை

பேச்சின் மூலம் சுவையான தேடல் மார்ச் 26, 2008

Posted by உதய தாரகை in Internet, Software.
add a comment

விசைப்பலகை கொண்டு எல்லாவற்றையும் டைப் செய்து குறித்த விடயங்களை தேடல் பொறிகளின் மூலம் பெற்றுக் கொண்ட காலம் மலையேறப் போகின்றதோ என எண்ணத் தோன்றுகிறது. நாம் பேசுவதை உணர்ந்து அதற்குப் பொருத்தமான தேடல் நிலைகளைக் பட்டியற்படுத்த இணையச் சேவை நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன.

Tazti (பெயரினை Tasty என உச்சரிக்கலாம் – அப்போ சுவையான சமாச்சாரம் அப்படித்தானே. இருக்கோட்டும்.. இருக்கோட்டும்) என்ற நிறுவனம் எமது பேச்சினை உணர்ந்து அதன்படி, தேடல்களை ஆற்றும் மென்பொருளொன்றை உருவாக்கியுள்ளது.

3.jpg

இது அனைத்து இணைய நிலையில் அமைந்த மென்பொருள்களோடும் (Web applications) மிகவும் சிறப்பாக இயங்குகின்றது. நீங்களும் குறித்த தளத்திற்குச் சென்று மென்பொருளை பதிவிறக்கம் செய்துதான் பாருங்களேன்.

பேச்சை உணர்ந்தறிந்து கருமமாற்றும் மென்பொருள் வந்துவிட்டதே என்று keyboard, mouse என்பவற்றை எரிந்துவிடாதீர்கள். அவையில்லாமல் கணினியில் பல வேலைகளைச் செய்யமுடியாமல் போகும் என்பதை நான் சொல்லியா நீங்கள் அறிய வேண்டும்.

- உதய தாரகை

Firefox ஐ வேகமாக்குதல் மார்ச் 26, 2008

Posted by உதய தாரகை in Firefox, Internet, Software.
add a comment

Firefox browser பொதுவாகவே வேகமாக இணையத்தளங்களை பதிவிறக்கம் செய்யும் ஆற்றவலுடையது. அதனை மேலும் குறிப்பிடத்தக்களவு வேகமாக இயங்கச் செய்யும் வழியொன்றைக் கண்டறிந்தேன். உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

Firefox இல் மறைத்து வைக்கப்பட்டுள்ள Menu ஐ தெரியப்படுத்திக் கொண்டால் இந்நிலையைச் சாத்தியமாக்கலாம்.

Firefox இன் Address bar இல், about:config என டைப் செய்து கொள்ளுங்கள்.

1.jpg

பின்னர் Enter key ஐ அழுத்துங்கள். அங்கே Firefox இன் மறைந்துள்ள Menu காட்சியாகத் தொடங்கும்.

அங்கே Network prefetch-next என்ற நிலையைக் கண்டு கொள்ளுங்கள். அதற்கு நேரே Value என்ற நிரலின் பெறுமானம் True என்றவாறு அமைந்து காணப்படும். அதன் மேலே Double click செய்வதன் மூலம் அதன் பெறுமதியை False என அமைத்துக் கொள்ளுங்கள்.

2.jpg

பின்னர், Firefox மூலம் இணையத்தை உலா வந்து பாருங்கள். நிச்சயமாக வேகமான இணைய அனுபவத்தை உணருவீர்கள். அவ்வளவுதான்.

- உதய தாரகை

ஆரம்பிப்போமா? மார்ச் 26, 2008

Posted by உதய தாரகை in ஆரம்பம்.
1 comment so far

தொடர்ச்சியாக, அநேகமாக எல்லா நாளும் குறைந்தது ஒரு இடுகையாவது இந்த வலைப்பதிவில் இடவேண்டுமென்ற ஆர்வத்துடன் நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

இதில் கணினி, இணையம், வாழ்க்கை என விரியும் அத்தனை பகுதியுள்ளும் காணப்படும் Tips, Tricks மற்றும் Hacks ஆகியவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இவை யாவும் நான் அறிந்து கொண்ட தகவல்களாகவே இருக்கும். இந்தத் தகவல்களை நீங்கள் பயன்படுத்த விரும்பினால் அல்லது மறுபிரசுரம் செய்ய விரும்பினால், எனது மின்னஞ்சலுக்கு [itgeekpro@gmail.com] ஒரு மடல் எழுதிவிட்டு அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் தளத்தின் முகவரி மற்றும் உதய தாரகை என்ற பெயருடன் பிரசுரிக்க அல்லது பயன்படுத்த முடியும்.

புலமைச் சொத்துக்கள் தொடர்பில் உங்களுக்கு அதிக சிரத்தையுண்டு என நம்புகிறேன். அதிகம் கதைக்க ஆர்வமில்லை. ஆரம்பிப்போமா…

தொடங்கி கலக்குவோம் வாங்க.. புதிய அறிவுகளைப் பெறலாம் வாருங்க…

-உதய தாரகை