புதுநுட்பம் வாருங்கள். நுட்பங்கள் பற்றிய புரிதல்களை விரிவாக்குங்கள்.

நுட்பங்கள் சார்பான தெளிவை விரிவாக்கும் தகவல்களைத் தரும் பதிவுகள் தொடர்’ந்தும் புதுநுட்பம் தளத்தில் பிரசுரமாகிறது. அந்தத் தளம் வந்து அழகிய தமிழில் நுட்பங்கள் பற்றிய புரிதல்களை விரிவாக்குங்கள்.

இணைப்பு: புதுநுட்பம் http://www.puthunutpam.com 

நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக

தொட்டால் பூ மலரும்

தொழில்நுட்ப வளர்ச்சியின் வியாபிப்பு மிக வேகமாகவே இடம்பெற்று வருகின்றதை எம்மால் நிறையவே அவதானிக்க முடிகிறது. வளர்ச்சி காணும் தொழில்நுட்பம் ஏற்படுத்தும் சாத்தியங்கள் ஒன்றா, இரண்டா… இல்லேயே ஆயிரமாயிரம். இந்த தொழில்நுட்hத்தின் அதீத வளர்ச்சியின் காரணமாகத் தோன்றியுள்ள இன்னொரு புதுமையான தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையே இக்கட்டுரை ஆராயப்போகிறது.

தொட்டால் பூ மலரும், பாடல் ஒலிக்கும், காட்சி தெரியும், கோப்பு நகரும், இணையத்திற்கு இணைப்புக் கிடைக்கும் என அடுக்கிக் கொண்டே செல்லக்கூடிய சாத்தியங்களை உருவாக்கிய தொழில்நுட்பம் தான் தொடுதிறன் தொழில்நுட்பம் என வழங்கப்படும் Touch Technology ஆகும்.

Mouse இன் மௌசை குறைக்குமளவில் வியாபித்து வரும் Touch தொழில்நுட்பம் இன்றைய நிலையில் அதிகமான இலத்திரனியல் சாதனங்களின் இணைக்கப்பட்டதாக விற்பனைக்கு வருகின்றது. சில தசாப்தங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்தத் தொழில்நுட்பமானது, அன்றைய காலம் முதல் ஒரு சில தொழில்நிலைச் சாதனங்களில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இன்றைய நிலையில் அநேக சாதனங்களில் பயன்படுத்தப்படும் இத்தொழில்நுட்பம் அதன் முழு நிலை அபிவிருத்தியையும் அடைந்து விட்டதா என்பதை இன்றைய கேள்வியாகும். அதாவது, சுருக்கமாக, தொடுதிறன் தொழில்நுட்பம் வயதுக்கு வயதுவிட்டதா? என கேட்கலாம்.

கடந்த வருடம் (2007) மைக்ரோசொப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த மேசைக் கணினி மற்றும் அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த iPhone என்பன Touch தொழில்நுட்பத்தையே தம்வசம் உயிர்நாடிக் கூறாகக் கொண்டிருக்கிறது.

5000 ஸ்டெலிங் பவுன்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கும் மைக்ரொசொப்டின் Surface மேசைக் கணினியானது, வீடுகளில் பாவனைக்காக  அதிகமாகப் பாவனைக்கு வருமென எதிர்பார்க்க முடியாது. இந்த மேசைக் கணினிகள் ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளில் உணவுகளை ஓடர் செய்யவும், இணையத்தை வலம் வருவதற்கும் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த மேசைக்கணினியின் விலை குறையும் போது, இது அதிகளவில் வீடுகளிலுள்ள சுவர் மற்றும் தளபாடம் ஆகியவற்றில் அமையப் பெற்றுவிடுமென மைக்ரொசொப்ட் நிறுவனம் நம்பிக்கை வெளியிடுகிறது.

தொடுதிறன் தொழில்நுட்பத்தின் மீது மைக்ரொசொப்ட் நிறுவனம் அதிக சிரத்தை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 2007 ஜனவரி மாதம் விஸ்டா பணிசெயல் முறைமை வெளியிட்ட தருணத்திலேயே, TouchSmart எனும் பெயரில் அமைந்த தொடுதிறன் தொழில்நுட்ப சாத்தியத்தைக் கொண்ட கணினியை உற்பத்தி செய்ய Microsoft ஆனது, Hewlett Packard கணினி நிறுவனத்துடன் இணைந்து கடமையாற்றியது குறிப்பிடத்தக்கதாகும்.

“விஸ்டாவிற்கு பொருத்தமான வன்பொருள் நிலைகளை தன்னகம் கொண்டதே, இந்தத் தொடுதிறன் தொழில்நுட்பக்கணினியாகும்” என Hewlett Packard நிறுவனத்தின் Rob Crampton தெரிவிக்கின்றார்.

கணினிகளை மக்கள் அதிகளவில் பாடல்கள், திரைப்படங்கள் மற்றும் நிழற்படங்கள் ஆகியவற்றை சேமித்து வைக்கவே பயன்படுத்துகின்றனர். இதனால் விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse) என்பனவற்றின் பயன்பாடு அதிகளவில் தேவைப்படாது என்றே நான் நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

“வினோதாம்சத்திற்காக கணினி பயன்படுத்தப்படும் போது, அக்கணினி வினோதாம்சத்திற்கே உரித்தான சாதனங்கள் கொண்டுள்ள எளிமையான நிலைகளைக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்தானே!” என அவர் தெரிவிக்கிறார்.

Keyboard இன் பாவனையை முற்றாக நாம் விட்டுவிடவும் முடியாது. சாதாரணமாக மின்னஞ்சல் ஒன்றை எழுதி அனுப்பும் நிலையில் Keyboard இன் பங்கே பிரதானம். ஆனாலும், நிழற்படம், திரைப்படம், பாடல் போன்றவற்றை ஒழுங்கமைத்துக் கொள்ள அது அவ்வளவில் தேவைப்படாது.

மக்கள் தமது வரவேற்பறை மற்றும் சமையலறை ஆகியவற்றில் கணினியை அல்லது கணினியை உயிர்ப்பிக்கச் செய்யும் Button ஐ வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். இந்த தொடுதிறன் கணினியின் திரையை இரு தடவை தொட்டதுமே வானொலி ஒலிக்கத் தொடங்கும் அது மட்டுமா, நான்கு தடவை தொட்டால் நிழற்படமானது, அச்சாகத் தொடங்குமென அவர் தொடுதிறன் கணினியின் சாத்தியத்தை கூறி வியக்கிறார்.

தொடுதிறன் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வெளிவந்த முதல் கையடக்கத் தொலைபேசியாக Apple இன் iPhone இல்லாதபோதும், மக்கள் மத்தியில் அது ஏற்படுத்திய எதிர்பார்ப்பு, ஆதரவு என்பன வியப்பிற்குரியன.

இதேவேளை, தாய்வானின் கையடக்கத் தொலைபேசி உற்பத்தி நிறுவனமான HTC ஆனது, TouchFLO என்ற தொடுதிறன் தொழில்நுட்பத்தைப் கொண்ட புதிய கையடக்கத் தொலைபேசியை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்தக் கையடக்கத் தொலைபேசியானது, iPhone ஐப் போலல்லாது, ஒரு சில முன்னேற்றகமான தொழிற்பாட்டு நிலைகளைக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

iPhone இல் இலகுவில் குறுஞ்செய்திகளை Type செய்ய முடியாமலுள்ளது ஒரு பிரதிகூலமாகுமெனவும், ஆனால், வடிவமைப்பு தொடர்பில் மிகவும் நேர்த்தியான உற்பத்திப் பொருள் இது எனவும் விமர்சகர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

Apple நிறுவனத்தின் iPhone இன் வடிவமைப்பைத் தோற்கடித்து முன்னிற்கும் வகையில் இன்னும் 5 ஆண்டுகளுக்கு எந்த தயாரிப்பு வெளிவராது. அத்தோடு touch screen வீடியோ iPod மற்றும் தொடுதிறன் தொழில்நுட்பத்தைக் கொண்ட Apple TV போன்றன பாவனைக்கு விரைவில் வரலாம் என எதிர்வுகூறலாம்” என விமர்சகர் Benjamin Reitzes கருத்துத் தெரிவிக்கிறார்.

ஹொலிவூட் திரைப்படங்களில் வியப்பு நிலைகளாகக் காட்டப்பட்;ட விஞ்ஞானப் புனைக்கதைகளின் வடிவங்களாக அமைந்திருந்த தொடுதிறன் ஆற்றல்கள் இன்றளவில் நிஜமாகி மக்களை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியிருப்பது தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சியையே பறைசாற்றி நிற்கின்றது.

பல்நிலை தொடுதிறன் தொழில்நுட்ப சாத்தியங்களை உருவாக்குவதில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நியுயோர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானியான Jefferson Han தனது ஆராய்ச்சியின் விளைவால் உருவாக்கிய தொழில்நுட்ப வருவிளைவை வுநுனு (Technology Entertainment Design) எனப்படும் மாநாட்டில் காண்பித்து பார்வையாளர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டார்.

2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற முந்திய மாநாட்டின் போது, தனது கையிலிருந்த நிழற்படங்களை திரையில் அதிசயத்தக்க வகையில் தோன்றச் செய்ததன் பின்னர், “இயந்திரங்களுடன் நாம் இந்த வகையிலேயே இடைத்தொடர்பில் ஈடுபட வேண்டும்;” என குழுமியிருந்த பார்வையாளர்களை நோக்கி கூறினார்.

பௌதீக சாதனங்களின் நிலைகளுக்கேற்ப நாம் மாறுவதற்கு இந்தக் காலத்தில் கட்டாயமான அவசியமேதும் இல்லை. எமது விருப்புகளிற்கேற்பவே பௌதீக சாதனங்கள் பணியாற்றத் தொடங்க வேண்டும் என தனது விருப்பை அன்று வெளியிட்டார்.

சில அமைவிட மென்பொருள்கள், ஒரு சோடி கைகள் மற்றும் 2.4 அங்குல திரை ஆகியனவற்றைக் கொண்டு என்னவெல்லாம் செய்ய முடியுமென இவ்வருடம் இடம்பெற்ற மாநாட்டின் போது, அவர் தெளிவாகக் காண்பித்தார்.

இரண்டு கைகளினதும் தொடுகையின் காரணமாக உண்டாகும் அசைவு மற்றும் அழுத்தம் ஆகியவற்றின் மூலமாக உணர்வைப் பெறும் திரையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் சிலிக்கனானது, பயனர்களின் விருப்பக் கட்டளைகளை வெகு நேர்த்தியாக செய்யும் தகவுடையதாகக் காணப்பட்டது. இந்தத் திரைகள் மிகவும் விலையுயர்ந்தவையாகும். ஆனாலும், சில நிறுவனங்கள் இதனைக் கொள்வனவு செய்வதற்கான தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாக hயn தெரிவிக்கிறார்.

Perceptive Pixel எனும் நிறுவனமானது, பல்நிலை தொடுதிறன் தொழில்நுட்பத்தைக் (Multi-touch technology) கொண்டமைந்த மேசைகளை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இவ்வாறு உருவாக்கப்படும் திரைகள் கடைகளிலும், நூதனசாலைகளிலும் காணப்படும் சுவர்களில் அமையப்பெற்று தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சியின் சாத்தியங்களை உணர்த்தக்கூடும்.

மைக்ரொசொப்ட் இந்தத் தொடுதிறன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பால் அதிக கவனம் செலுத்திய போதும், Mouse இல்லாத யுகமொன்றுக்கு கணினிகளை இட்டுச் செல்வதில் அவ்வளவு அக்கறையை அது காட்டவில்லை.

1980 களிலிருந்து தொடுதிறன் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மைக்ரோசொப்டின் பிரதான ஆராய்ச்சியாளர் Bill Buxton அண்மையில் வெளியிட்ட தனது ஆராய்ச்சி தொடர்பான அறிக்கையான “Multi-Touch Systems that I have known and loved” என்ற தலைப்புடைய அறிக்கையில், தொடுதிறன் தொழில்நுட்பம் Mouse இன் மௌசைப் போக்கிவிடும் என்ற கூற்றை முற்றாக நிராகரிக்கிறார்.

“Mouse இன் துணையில்லாமல் கணினியில் பல காரியங்களை மிக இலகுவாகச் செய்து கொள்ள முடியாது. பல விடயங்களை கணினியில் ஆற்றுவதற்கு Mouse மிகவும் உயிர்ப்பான சாதனமாகும். Mouse உடன் சேர்ந்து இயங்கும் தொடுதிறன் சாத்தியங்களைக் கொண்ட கணினிகளே காலத்தின் தேவையாகும். இதுவே பயனர்களின் வேலைகளை துரிதமாகச் செய்து கொள்ள வழிகோலும்” என அவர் அவ்வறிக்கையில் விரிவாகக் குறிப்பிடுகின்றார்.

TouchSmart போன்ற ஏனைய சாதனங்களின் வருகையானது, மென்பொருள் உற்பத்தியாளர்கள் தமது மென்பொருள் வடிவமைப்புகளில் தொடுதிறன் சாத்தியங்களையும் இணைத்து வடிவமைக்க வேண்டியதை உணர்த்துகின்ற நுழைவாயில் ஆகுமென Hewlett-Packard இன் Crampton கூறுகிறார்.

தொடுதிறன் தொழில்நுட்பம் வயதுக்கு வந்துவிட்டதாக அவர் திடமாக நம்புகிறார்.

“இன்னும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்குள் தொடுதிறன் தொழில்நுட்பத்தைக் கொண்ட கணினிகள் வீடுகளில் மிகவும் பிரபல்யமடையுமென நான் எண்ணுகிறேன்” என அவர் எதிர்வுகூறுகிறார்.

தொட்டால்… கணினியில் நிகழ்த்த நினைக்கும் விடயங்களை சாத்தியமாக்கலாம். இது புதிய யுகம். தொடுதிறன் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அவத்தை. எமது அன்றாட நிலைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் கூறாக மாறியுள்ள இந்த Touch Technology இன் வியாபிப்பை கண்டு வியக்காமல் என்ன செய்வது….???

பின்னூட்டமொன்றை இடுக

தொடர்ந்தும் இணைந்திருங்கள்

கொஞ்சம் இந்த நாட்களில் Busy என்பதால் Regular ஆக, Post போட முடியாமல் இருக்கிறது. ஆனால், இந்த வலைப்பதிவை புதிய தகவல்களால் போஷித்து உங்களுக்கு வழங்கக் காத்திருக்கிறேன். கொஞ்சம் பொறுத்திருங்கள். தொடர்ந்தும் IT GEEK PRO வலைப்பதிவுடன் இணைந்திருங்கள். ஏற்படும் அசெளகரியங்களுக்கு வருந்துகிறேன்.

இதேவேளை, உங்களின் பிரியமான எனது மற்ற வலைப்பதிவான, நிறம் வலைப்பதிவை தொடர்ந்தும் இற்றைப்படுத்தவுள்ளேன்.

அத்தோடு உங்களின் கணினி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை எனக்கு அனுப்பி வையுங்கள்.

நிறம் வலைப்பதிவிற்கு சென்றுதான் பாருங்களேன்…

– உதய தாரகை

பின்னூட்டமொன்றை இடுக

Google மற்றும் Yahoo என்பன இருவாரங்களுக்கு இணைகின்றன

உலகின் இணையத்தின் தேடல் பொறிகளின் ஜாம்பவான்களான yahoo மற்றும் google ஆகியன சேர்ந்து இரண்டு வாரங்களுக்கு விளம்பர இடத்தைப் பகிர்ந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.

இந்த முன்னெடுப்பானது, Microsoft ஐ எரிச்சலூட்டவதற்காகவே செய்யப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். Microsoft ஆனது, Yahoo ஐ விலைக்கு வாங்க முனைப்புகளை  மேற்கொண்டு வருகின்றது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்த அதிசயமான மற்றும் வரலாற்று முக்கியத்துவமான இரண்டு ஜாம்பவான்களின் இரண்டு வாரங்களுக்கான இணைப்பின் மூலம் இணைய உலகில் புதிய மாற்றங்கள் முன்னேற்றகரமாக ஏற்பட வாய்ப்புள்ளதென எதிர்பார்க்கலாம்.

இந்த விடயம் சார்பான பூரண செய்தியை இங்கே வாசிக்கலாம் [செய்தி இணையத்தளம்]

– உதய தாரகை

பின்னூட்டமொன்றை இடுக

இப்படியும் நடக்கிறது…

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரில் பதிவு செய்யப்பட்ட Domain name ஒன்றை சுமார் 2.6 மில்லியன் அமெரிக்க் டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். என்ன மூக்கின் மேல் விரல் வைக்கிறீர்களா? அதிசயம் தான் ஆனால் உண்மை.

இவர் பெயரில் பதிவாகியிருந்த Pizza.com என்ற Domain name ஐயே அவர் ஏலத்தில் விற்பனை செய்யத் தீர்மானித்துள்ளார். முதலில் ஏலத்தொகை வெறும் 100 டொலர்களாகவே காணப்பட்டுள்ளது. ஒரு கிழமைக்குள் அது 2.6 மில்லியன் அமெரிக்க டொலராக மாறியுள்ளது. வித்தியாசமான வியப்பே….

இது தொடர்பான பூரண தகவல்களை அறிந்து கொள்ள [செய்தி இணையத்தளம்]

– உதய தாரகை

1 பின்னூட்டம்

Pen Drive இற்குள்ளேயே Office Package!!

Office Package என்பது கட்டாயம் ஒரு கணினியில் நிறுவப்பட்டிருக்கும் போதே பல வேலைகளை எம்மால் விரைவாகவும் இலகுவாகவும் செய்து கொள்ள முடியும். இவ்வாறான Office Package களை அனைத்து கணினிகளிலும் நிறுவி வைக்கப்பட்டிருக்குமென நாம் எதிர்பார்க்க முடியாது. நாம் தற்காலிகமாகப் பயன்படுத்தும் கணினியில் Office Package ஆனது, install ஆக்கப்படாமல் காணப்பட்டால் என்ன செய்வது…?? இதற்கு ஏதாவது மாற்று வழியுண்டா..?? ஆம். ஒரு மிக இலகுவான வழி இருக்கிறது.

எமது Pen Drive இல், Office Package ஐ நிறுவிக் கொண்டால் நாம் போகும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தும் கணினியில் Office Package இல் அடங்கும் மென்பொருள்களைச் செயற்படுத்தி எமக்குத் தேவையான காரியங்களைச் செய்து கொள்ள முடியும்.

எப்படி Pen Drive இற்குள், Office Package ஐ Install செய்து கொள்வது??? நல்ல கேள்வி.. இதோ அதற்கான தீர்வு. Pen Drive இற்குள் Install செய்யக்கூடிய வகையான office package ஐ ஒரு இணையச் சேவை நிறுவனம் வழங்குகின்றது. Tiny USB office என்ற பெயர் கொண்டு இனங்காணப்படும் இச்சிறிய கொள்ளவுடைய Office Package பல மென்பொருள்களைத் தன்னகம் கொண்டுள்ளது.

இந்த Office Package தன்னகம் கொண்டுள்ள மென்பொருள்கள்

  • Database Creation – with CSVed
  • Data Encryption – with DScrypt
  • Email Client Software – with NPopUK
  • File Compression – with 100 Zipper
  • File Sharing – with HFS
  • File Transfer – with FTP Wanderer
  • Flowchart Creation – with EVE Vector Editor
  • MSN Messenger Client – with PixaMSN
  • Tree-Style Outliner Software – with Mempad
  • PDF Creation – with PDF Producer
  • Password Recovery – with XPass
  • Secure Deletion – with DSdel
  • Spreadsheet Creation – with Spread32
  • Text Editing – with TedNotepad
  • Word Processing – with Kpad
  • Program Launching – with Qsel

இதோ உங்கள் Pen Drive ஐயும் இம்மென்பொருள்களைக் கொண்டு பலப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tiny USB office இனை பதிவிறக்கம் செய்யக்கூடிய தளம் – [இங்கே கிளிக் செய்யுங்கள்]

உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்கள்..

– உதய தாரகை

1 பின்னூட்டம்

இரவில் சத்தம் போடாத கணினி வேண்டுமா?

கணினியில் காணப்படும் ஒலிபெருக்கிகளை off செய்து வைத்தால் அதிலிருந்து வரும் சத்தங்கள் எமக்கு ஒருபோதும் கேட்காது. இதனை நாம் கைமுறையாக (manually) ஒலிபெருக்கியை off செய்து கொள்ளலாம். இந்த வேலையை தன்னியக்கமாகவே செய்யக் கூடிய ஏதாவது நிலை இருந்தால் எப்படியிருக்கும். நன்றாகத்தான் இருக்கும் தானே..

அதற்கும் ஒரு மென்பொருள் உள்ளது. இதனைப் பயன்படுத்தி எமது கணினியில் காணப்படும் Sound ஐ mute செய்து கொள்ள முடியும். இவ்வாறு Mute செய்தால் கணினியிலிருந்து சத்தமே வராது. இந்த விடயம் நடக்க வேண்டிய நேரத்தை குறித்த மென்பொருளில் வழங்கினால் மிகச் சிறப்பாக அந்த நேரத்தில் mute நிலைக்கு கணினியைத் தன்னியக்கமாகவே அம்மென்பொருள் கொண்டுவரும்.

மென்பொருள் பற்றிய விபரங்களும் பதிவிறக்கம் (DOWNLOAD) செய்வதற்கான இணைப்பையும் இங்கே கிளிக் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

– உதய தாரகை

பின்னூட்டமொன்றை இடுக

Windows XP இல் மறைந்துள்ள மென்கருவிகள்

Windows XP இல் பல மென்கருவிகளும், செயற்பாட்டு ஆயுதங்கள் பலவும் மறைந்து காணப்படுகின்றன. இவை முந்திய Windows பதிப்புகளில் காணப்பட்ட மென்கருவிகளாகும். ஆனாலும், மென்பொருள் உருவாக்குபவர்களால் அவை கவனிக்கப்படாமலே போய்விட்டன.

இதோ மறைந்துள்ள விடயங்கள் உங்களுக்காக நிரற்படுத்தி அம்பலமாக்குகிறேன். இவை யாவற்றையும் Windows XP இல், மிக வேகமாக உயிர்ப்பாக்கி கொள்ள முடியும். கீழே தடித்த எழுத்தில் காணப்படும் சொற்களை Start >> Run ஊடாகச் சென்று, அதன் போது, தோன்றும் Dialog box இல் Type செய்து, OK செய்தால் போதும். மறந்து போய் மறைந்துள்ள மென்கருவிகள் உயிர்ப்புக் கொள்ளும்.

perfmon – உங்கள் கணினியின் தொழி்ற்பாடுகள், வினைத்திறன் என்பன அனைத்தும் பற்றி மிகத் தெளிவான அறிக்கையை வழங்கும் மென்கருவி

rasphone – remote access phonebook, used to manage dial-up networking

telnet – ancient PC to PC remote command and communications system

winchat – communications tool for exchanging messages over a network

விரைந்து உங்கள் கணினியை இயக்கி மறைந்த மென்கருவிகளை உயிர்ப்பித்துப் பாருங்கள். அதிசயமாயிருக்கும்.

– உதய தாரகை

பின்னூட்டமொன்றை இடுக

Firefox 3 Beta 5 ஐ இப்போது Download செய்யலாம்

Mozilla Firefox தனது மிகப் பிந்திய Firefox 3 இனை Download செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தப் புதிய பதிப்பில் முந்திய Beta பதிப்பிலிருந்து  750 முன்னேற்றகரமான மாற்றங்கள் காணப்படுகின்றன. இந்தப் பதிப்பினைப் பயன்படுத்தி Gmail, Zoho போன்ற மிக வேகமாக Load செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.

புதிய Firefox இன் பதிப்பை பதிவிறக்கம் செய்து, உங்கள் கணினியில் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். வேகமான இணைய இணைப்பின் அனுபவத்தை உணர்வீர்கள்.

Mozilla Firefox 3 ஆனது, எதிர்வரும் ஜுன் மாதம் பூராண பதிப்பாக வெளியிடப்படவுள்ளது.

பதிவிறக்கம் செய்வதற்கான முகவரி: http://www.mozilla.com/en-US/firefox/all-beta.html

உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்!

– உதய தாரகை

பின்னூட்டமொன்றை இடுக

இது ரொம்ப பெரியது!

இணையத்தளங்களின் முகவரிகளை சுருக்கமாக வைத்துக்கொள்ளவே அனைவரும் விரும்புவர். இவ்வாறு நீளமான இணைய முகவரிகளை சுருக்கித் தரும் இணையச் சேவைத்தளங்களும் இணையப்பரப்பிலே காணப்படுகின்றன. இது இவ்வாறிருக்க, இப்படியொரு இணைய முகவரி கொண்ட தளம் காணப்படுகின்றது.

இணைய முகவரியை வாசிக்க முன் மூச்சையொருமுறை இழுத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். ம்…. இப்போது வாசியுங்கள்.

http://www.abcdefghijklmnopqrstuvwxyzabcdefghijklmnopqrstuvwxyzabcdefghijk.com

என்ன தலைசுற்றுகிறதா? இதுவும் ஒரு இணைய முகவரிதான். ஒரு வரியில் இந்த இணையத்தளத்தின் பெயரை முழுமையாக எழுத இடம் போதாது என்பதையும் கவனிக்க.

இந்த இணையத்தளம் என்ன சேவையை வழங்குகின்றது என அறீவீர்களா? இலவசமாக பயனர்களுக்கு மின்னஞ்சல் முகவரிகளை வழங்குகின்றது. உலகிலேயே மிக நீளமான மின்னஞ்சல் முகவரியை நீங்கள் பெற விரும்பினால் இந்தத் தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் வழங்கிய User name இனை இணைத்து @ என்ற குறியீட்டிற்கு பின்னால், இவ்விணையத்தளத்தின் முகவரியைக் கொண்டதான மின்னஞ்சல் முகவரியைப் பெறலாம். ஆனாலும் இது ரொம்பவும் பெரியதுதான். 🙂

இப்படியொரு முகவரியைப் பெற்று நீங்கள் உங்கள் நண்பரிடம் email அனுப்பச் சொன்னால், நண்பர் உங்கள் மின்னஞ்சல் முகவரியை Type செய்ய… ஒரே கலாட்டாதான்… It’s very funny…

கொஞ்சம் உங்கள் நண்பரைக் குழப்பித்தான் பாருங்களேன். 🙂

– உதய தாரகை

1 பின்னூட்டம்